பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தேம்பி அழாதே:
திடம் கொண்டு போராடு

நமக்குத் தொழில் கவிதை. நாட்டுக்குழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்று பாரதியார் தமது தொழிலைப் பற்றிக் கூறியிருக்கிறாரல்லவா? கவிதை எழுதுவதும், தாய் நாட்டிற்காக உழைப்பதும் இவர் தொழிலாம் - அதே சமயத்தில் சோர்வடையாமல் இருப்பதும இவர் ஏற்படுத்திக் கொண்ட வாழ்க்கை நெறியாகும் பாரதியார் சோம்பலை வெறுத்தார். அது கெடுதியை உண்டாக்கும். அதனால் நன்மை விளையாது. அதனால்தான் ஓடிவிளையாடு பாப்பா - நீ ஓய்ந்திருக்கலாகாது என்று முதலிலேயே பாப்பாவுக்குச் சொல்லுகிறார். சோம்பல் மிகக் கெடுதி என்று மறுபடியும் கூறுகிறார். தாய்தான் குழந்தைக்கு முதல் தெய்வம். தாயின் அன்புக்கு இணையாக வேறொன்றையும் சொல்ல முடியாது. அதனால் தாயின் சொல்லைத் தட்டிப் பேசக் கூடாது.

சில குழந்தைகள் எதற்கெடுத்தாலும் அழத் தொடங்கிவிடும். சிரித்துக் கொண்டிருக்கிற குழந்தையை யாரும் அன்போடு அணைத்துக் கொள்வார்கள். ஆனால் அழத் தொடங்கிவிட்டால் தந்தை கூட இந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு போ என்று தாயிடம் சொல்லுவார்.

தேம்பி அழுகின்ற குழந்தை நொண்டி என்று குழந்தையைக் கேலி செய்கிறார் பாரதியார். குழந்தை உண்மையில் நொண்டியில்லை. தேம்பி அழுவதுதான் தவறு; அதனால் அதை நொண்டிக்குழந்தை என்கிறார். குழந்தைப் பருவத்திலிருந்தே தைரியத்தோடு இருக்க

37