பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழ் நாடு தாய்; இந்தியா தெய்வம்


தமிழ் நாட்டைத் தாயென்று கும்பிடவேண்டும். அந்த மண்ணில்தான் குழந்தை பிறந்து, விளையாடிக் களிக்கின்றது. ஆதலால் அது தாய்க்கு ஒப்பாகும். தமிழ் நாட்டில் வழங்கும் தமிழைத்தான் முதன் முதலில் குழந்தை பேசுகிறது. அதனால் அது குழந்தையின் தாய் மொழி. தமிழ் மிக உயர்ந்தது என்று பாப்பாவுக்கு பாரதியார் எடுத்துச் சொல்லுகிறார்.

ஆனால் அதே சமயத்தில் நமது முன்னோர்கள் வாழ்ந்த நாடாகிய இந்தியாவை மறந்து விடக் கூடாது. இந்தியாவை மறந்து விட்டுத்தமிழ் நாட்டை மட்டும் நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. அது குறுகிய எண்ணம். ஆதலால் இந்தியாவை மறந்து விடுவது தவறு. இந்தியா நமது தேசம். அதன் குழந்தைகள் நாம்.

இந்தியாவின் வடக்கில் இமயமலை இருக்கின்றது. அதைப் போன்ற உயரமான மலை உலகத்தில் வேறெங்கும் கிடையாது. தெற்கிலே கன்னியாகுமரி இருக்கின்றது. மற்ற இரண்டு திசைகளிலும் பரந்த கடல். இவற்றின் மத்தியில் இந்தியா என்ற ஒப்பற்ற நாடு நமது முன்னேர்களின் நாடாகவும், நமது நாடாகவும் விளங்குகின்றது.

இங்குதான் உலகத்தார் புகழும் வேதம் படைத்த முனிவர்களும் ரிஷிகளும் வாழ்ந்தார்கள். பெரியபெரிய வீரர்கள் இந்த மண்ணில் தோன்றி யிருக்கிறார்கள். ஆதலால் இது நமது தாய் நாடு. தாயைத் தெய்வமென்று போற்றுவதைப் போல இந்தியாவையும்போற்ற வேண்டும். தமிழ்நாடு நம்மைப் பெற்ற தாய். அதே

39