பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயத்தில் இந்தியா நமது தெய்வம். இவற்றை மறந்து விடக் கூடாது என்கிறார் பாரதியார்:

தமிழ்த் திருநாடு தன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா

அமிழ்தில் இனியதடி பாப்பா - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா

செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.

வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில்
வாழும் குமரி முனை பாப்பா

கிடக்கும் பெரிய கடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.

வேதமுடைய திந்த நாடு - நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு

சேதமில்லாத ஹிந்துஸ்தானம் - இதைத்
தெய்வமென்று, கும்பிடடி பாப்பா.

சாதிகள் இல்லை

சாதி நூறு சொல்லுவாய் போ போ என்று பாரதியார் கோபத்தோடு வேறொரு பாட்டிலே சொல்லியிருக்கிறார். சாதிப் பிரிவினையால்தான் நமது நாடு தனது

சிறப்பை இழந்தது. எல்லாரும் சமம் என்கின்ற உணர்ச்சி வந்து விட்டால் இந்தியா வலிமை மிகுந்த நாடாகிவிடும்.

40