பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிறைவேற்றிக் கொள்ளலாம். அவற்றை நடைமுறையில் கொண்டுவந்து மக்களுக்கு நன்மை செய்யலாம். அதற்கு நமக்கு சுதந்திரம் இன்று இருக்கிறது.

1947ஆம் ஆண்டுக்கு முன்னல் அப்படியில்லை. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு மேல் ஆங்கிலேயர் அரசாங்கம் இங்கு நடந்து கொண்டிருந்தது. ஆங்கிலேயர் தங்களுடைய நன்மைக்கு என்ன வேண்டுமோ அப்படியெல்லாம் சட்டம் செய்திருந்தார்கள். இந்தியாவின் செல்வமெல்லாம் வெளிநாட்டிற்குக் கோடி கோடியாகச் சென்று கொண்டிருந்தது.

இந்தியாவில் மக்கள் வறுமையால் வாடினர்கள். பஞ்சத்தாலும் நோயாலும் லட்சக்கணக்காக மடிந்தார்கள். அப்பொழுது வாழ்ந்த நமது மக்கள் பேசாமல் ஆடு மாடுகளைப் போல சகித்துக் கொண்டிருந்தார்கள். ஆடு மாடுகளாவது சில சமயங்களில் பாய்ந்து கொல்ல வரும். நமது மக்களால் அதைச் செய்யவும் முடியவில்லை. நம்மால் என்ன செய்ய முடியும் என்று தலையைக் குனிந்து கொண்டிருந்தார்கள்.

இப்படி இருந்தால் மக்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள் என்று சொல்லத்தானே வேண்டும்? முப்பது கோடி மக்களை சுமார் இரண்டு லட்சம் வெள்ளையர் ஆண்டார்கள்!

தானியம், கிழங்குகள், பழம் இவையெல்லாம் நமது நாட்டிலே நிறைய உண்டு. அதனல் தான்

கனியும் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றித்
தரும் நாடு-நித்தம் நித்தம் கணக்கின்றித்

தரும் நாடு என்று இந்திய தேசத்தைப் புகழ்ந்து பாரதியார் பாடியிருக்கிறார்.

2