பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் 0 85

கற்கோயில் உட்புறத்தில்

கால்வைத்த தெவ்வாறு

சகத்ர காமம் ? தெற்கோதும் தேவாரம்,

திருவாய்கன் மொழியான

தேனி ருக்கச் செக்காடும் இரைச்சலென வேதபா ராயணமேன்

திருக்கோ யில்பால்?

இப் பாடலில் மாணிக்கவாசகப் பெருமானுடைய போற்றித் திருவகவலை'யும், தேவாரம், திருவாய் மொழி ஆகியவற்றையும் 'தமிழ்த் தேன்’ என்று கூறுகிறார். தமிழ்த் தேன் ஆகிய இப் பாடல்கள் இருக்கச் செக்கு ஆடும் பொழுது தோன்றும் இரைச்சலைப்போல வேத பாராயணம் எதற்காகச் செய்யவ்ேண்டும் என்று கேட்கின்றார். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவை என்பதைச் சொல்ல வேண்டிய தேவையில்லை. என்றாலும் இவ் விரண்டு முரண்பட்ட கருத்துகளும் ஒரே கவிஞருடைய நாவில் முகிழ்த்தன என்றால் அதற்கு ஏதோ ஓர் அடிப்படைக் காரணம் இருத்தல் வேண்டும்.

'கம்பனுடைய இராமாயணம் நாட்டுக்குப் பெருந் தீங்கு விளைவித்தது' என்ற கருத்தைப் பல இடங்களிலும் கூறிச் சென்றுள்ளார்.

பன்னி ராயிரம் பாடிய கம்பனும் இப்பொது மக்கள்பால் இன்தமிழ் உணர்வை எழுப்பிய துண்டோ இல்லவே இல்லை