பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் e 97

முன்னுக்குப்பின் முரணாக இருக்கின்ற இப்பாடல்களே புரட்சிக் கவிஞரின் அக மனத்தை ஆராய்வதற்கு நமக்கு வாய்ப்பு அளிக்கின்றன. முரண்பாடுடைய இப்பாடல்களை ஆர அமர இருந்து படித்தால் மற்றோர் உண்மை புலனாகும். தமிழ் என்று கூறினால், கவிஞர் தம் உயிரைவிட அதிகமாக அதை நேசிக்கின்றார் என்பது யாவரும் அறிந்த உண்மை. 'தமிழுக்கு அமுது என்று பேர்; இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று ஏனையோரும் பாடியிருக்க லாம். ஆனால், தமிழா. அவர்கள் உயிரா என்று சோதனை ஏற்பட்டிருக்குமாயின் அவர்கள் கூற்றுக்கள் -ஏட்டுச் சுரைக்காயாக நின்று இருக்குமே தவிர, அக்கூற்றில் உண்மை இராது. ஆனால், புதுவைக் கவிஞரைப் பொறுத்தமட்டில் இந்தப் பாடல் கடுகளவும் உயர்வு நவிற்சி அன்று. தமிழ் என்று கூறினால் உண்மையிலே தம் உயிருக்கு நேர் என்று கருதினார். அவருடைய காலச் சூழ்நிலை அவரால் உயிர் என நேசிக்கப்பட்ட தமிழ் ஒதுக்கப்படுகின்ற கொடுங்காட்சியை அவருக்கு நல்கியது. அங்ங்னம் ஒதுக்கப்படுவதற்குக் காரணம் என்ன என்று கவிஞர் சிந்திக்கின்றார். இந்தச் சிந்தனை இவருக்கு மட்டு மன்று; இவருடைய ஆசானாகிய பாரதிக்கும் இதே சிந்தனை ஒடியுள்ளது. உயிருக்கு நேராகிய இன்பத் தமிழ், சாக்கடையில் கொட்டப்பட்ட தீஞ்சுவைத் தேன். போல் கேட்பாரற்றுக் கிடக்கின்ற அவ ல நிலை அவர்கள் காலத்திய நிலை. இதன் காரணம் என்ன என்ற ஆராய்ச்சியை இருவருமே மேற்கொள்ளு கிறார்கள்; என்றாலும் இரண்டு கவிஞர்களும் இரு வேறு முடிவுகட்கு எடுத்துச் செல்கின்றார்கள். பாரதி - யைப் பொறுத்தமட்டில் அந்நிய நாட்டினுடைய