பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 e அ. ச. ஞானசம்பந்தன்

ஆட்சி, அதன் கொடுமை, அதனால் அந்நியரின் மொழியின் மேல் ஏற்பட்ட மோகம் என்பவையுமே, தமிழுக்கு ஊறு செய்தன என்ற முடிவுக்கு வருகிறார்.

'செலவு தந்தைக்கு ஒர் ஆயிரம் சென்றது; தீது எனக்குப் பல்லாயிரம் சேர்ந்தன என்று பாரதியார் பாடும்பொழுது தமிழ் மொழியின் தாழ்வுக்கு அயல் மொழி மேல் பற்றே காரணம் என்ற கருத்தை வெளி யிடுகிறார். ஒரோவழித் தமிழ் கற்றவர்களும் வெறும் எழுத்தையும் சொல்லையும் கற்றார்களே தவிரத் தமிழ்ப் பண்பை அறிந்தார்கள் இல்லை என்று பாடுகிறார் பாரதி. இத்தகைய இழிநிலைக்குத் தமிழன் வரக் காரணம் தமிழ்ப் பண்பாட்டை அறியாத தமிழர்கள் பழமையில் கொண்ட பற்றுக் காரணமாகத் தவறு செய்கின்றார்கள் என்று பாடினார். இப் பெருமைகளையெல்லாம் வரிசைப்

படுத்தி, -

அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்து

ஆங்கி லம்பயில் பள்ளியுள் போகுநர்

  • . (சுயசரிதை:26) என்று பாடிச் செல்கிறார், பாரதி.

தமிழும் தமிழரும் அடைந்திருந்த கீழ்நிலை, பாரதி, பாரதிதாசன் என்ற இருவருக்கும் புரிந்தது. உண்மைதான் என்றாலும், அதற்குரிய காரணத்தைக் கவியரசர் பாரதியார் கண்ட அடிப்படை வேறு: புரட்சிக் கவிஞர் கண்ட அடிப்படை வேறு. புரட்சிக் கவிஞர். பிரெஞ்சு இந்தியப் பகுதியாகிய புதுவையி