பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் 0 88

லேயே பிறந்து வளர்ந்துவிட்ட காரணத்தால் ஆங்கில ஆட்சியால் ஏற்பட்ட கொடுமையை அறிந்துகொள்ள வாய்ப்பு இல்லாது போய்விட்டது. எனவே, தமிழின் கீழ்நிலைக்குக் காரணம் அந்நியர் ஆட்சிக் கொடுமை என்ற அடிப்படை புரட்சிக் கவிஞருக்குப் புலப்பட வில்லை. அதன் எதிராகத் தமிழர்களின் தவறான பழக்க வழக்கங்களும் சாதிக் கட்டுப்பாடுகளுமே இந் நிலைக்குக் காரணம் எனப் புரட்சிக் கவிஞர் சிந்திக்க லானார். தமிழரிடம் உள்ள இத் தவறான பழக்க வழக்கங்கள் அவர்கள் இழிந்த நிலைக்கு ஓரளவு காரணம் என்பதைப் பாரதியாரும் உண்ர்ந்திருந்தார். 'சிலப்பதிகாரமும் திருக்குறளும் தேர்ன்றிய நாட்டில் தமிழச் சாதி மிக உயர்ந்த நிலையில் இருக்கும் என்று நினைத்தேனே! முன்பு நான் தமிழச் சாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று உறுதிக் கொண்டிருந்தேன். ஒரு வத்தாயிரம் சனிவாய்ப்பட்டும் தமிழச் சாதி தான் உள் உடைவின்றி உழைத்திடும் நெறிகளைக் கண்டு எனது உள்ளம் கலங்கிடாது இருத்தேன். அந்நிலை மாறி இந் நிலைக்கு வந்ததே என்று வருந்திய கவியரசர் விதியே; விதியே: தமிழச் சாதியை என் செயக் கருதி இருக்கின் றாயடா’ என்று பாடிச் செல்கிறார். இக்குறைபாட்டின் காரணம் தமிழர்கள் ஆகிய நம்மிடத்திலேயே இருக்கிறது என்று நினைத்துப் பாடினார் பாரதியார். ஆனால், இக் குறைபாட்டுக்கு முழுக் காரணம், என்றோ நிகழ்ந்துவிட்ட ஆரிய நாகரிகக் கலப்பு என்று முழுவது மாக நம்பினார் புரட்சிக் கவிஞர். ‘. . .

சங்க இலக்கியத்தையும் தொல்காப்பியத்தையும் நன்கு கற்றிருந்த புரட்சிக் கவிஞர் இவ்வாறு