பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 இ. அ. ச. ஞானசம்பந்தன்

நினைத்தது விந்தைதான். எந்தக் காலத்தில் ஆரியக் கலப்பு ஏற்பட்டது என்பதை இன்றைய வரலாற்று: ஆராய்ச்சியாளர்களும் சொல்ல இயலாத நிலையில் இருக்கின்றது. என்றோ ஒருநாள் தமிழ் நாகரிகம் தலைதுாக்கியிருந்தது என்பதும் அந் நாகரிகம் ஆரிய நாகரிகத்தையும் திருத்தும் அளவிற்கு அவர் இடையே புகுந்து பல நன்மைகளை விளைத்தது என்பதும்

உண்மைதான். ஆனால், இவை இரண்டும் இரண்டறக் கலந்து எது எது என்று பிரித்துக் கூற முடியாதபடி

கலந்து சில ஆயிரம் ஆண்டுகள் ஆயின. பின்னர்

சரித்திரத்தின் போக்கில் நிகழ்ந்துவிட்ட இக் கலப்பை இன்று நினைந்து வருந்துவதாலும் அதைக் குறை. கூறுவதாலும் பயன் ஒன்றும் ஏற்படப் போவதில்லை. நம்பால் காணப்படும் குறையை எடுத்துச் சொல்லித். தீர்த்துவிட வேண்டுமென்ற சிறந்த நோக்கத்தில்

புரட்சிக் கவிஞர் திகழ்ந்தார் என்பதில் ஐயமே

இல்லை. தம் உயிரைவிட மிகுதியாக நேசித்த தமிழ்

மொழிக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் இழுக்கு

நேர்ந்தபோது அதைப் போக்க வேண்டுமென்று. கவிஞர் விரும்பியதால் போராட்டம் தொடங்கி

யிருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், அதற்கு அவர் மேற்கொண்ட வழிதான் ஒரளவு

விந்தையானது. இன்று எங்கும் காணப்படாத ஆரிய நாகரிகம் என்ற ஒன்றைத் தன் பகை எனக் கருதிச் சாடப் புறப்படுகிறார். இராமாயணம் போன்ற இதிகாசங்கள் நாட்டை நலிவு செய்து வந்தவை. என்று கருதிவிட்டார். * >

இலக்கிய உலகில் நேர்ந்த இந்த ஒரு குழப்பம் சமுதாய உலகிலும் தலைகாட்டத் தொடங்கியது.