பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் e 101

தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்தும் அம் மொழி தெரியாவிட்டாலும் வடமொழியே தமக்குத் தாய் மொழி என்று பேசியும் நடந்தும் வந்த பிராமணர் கண்ள எதிர்த்துக் கட்சி ஒன்று வலுவாகச் செயல்படத் தொடங்கியது. அற்றை நாளில் பாரதிதாசன் என்ற தனி மனிதர் இக் கட்சியின் சார்பு உடையவ ராக முழு மூச்சாக் அதன் வளர்ச்சிக்குப் பாடு பட்டதில் தவறு ஒன்றுமில்லை.

இருபதாம் நூற்றாண்டில் கவிஞர் என்று சொல்ல தகுந்தவர்கள் யார் இருப்பினும் தம்மையும் அறியாமல் ஏதோ ஒரு கட்சியில் கால்கொண்டனர் என்பது மறுக்க முடியாத உண்மை. பத்தெர்ன்பதாம் நூற்றாண்டுவரை அரசியல் கட்சிகள் என்று சொல்லத் தக்கவை இவ்வளவு பெரிய வளர்ச்சியையும் ஆழத்தை யும் கிளர்ச்சியையும் அடைந்திருந்தது இல்லை. பொது மக்களுடைய மனங்களைப் பற்றி ஈர்க்கின்ற அளவுக்கு அரசியல் கட்சிகள் எதுவும் அற்றை நாளில் இருந்த தில்லை. எனவே, கவிஞர்கள் என்று சொல்லப்படு பவர்களும் பொதுமக்கள் தொடர்பு அதிகம் இல்லாமல் தாம் உண்டு தம் கவிதை உண்டு என்ற நிலையில் இருந்து விட்டனர். அவர்களால் எழுதப் பட்ட கவிதைகளும் பொதுமக்களோடு அதிகம் தொடர்பு உடையனவாக இருந்ததில்லை. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரம் ஒன்று மட்டுமே சாதாரணக் குடிமகனைத் தலைவனாகக் கொண்டு திகழ்ந்தது. அதற்கு முன்னரும் பின்னரும் இத்தகைய நிலை ஏற்படவில்லை. பெரியபுராணக் காப்பியம் சாதாரண குடிமக்களையே தலைவர் களாகக் கொண்டு விளங்கினும் அவர்களுடைய அரசியல் வாழ்வு, சமுதாய வாழ்வு என்பன பற்றிக்