பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் e 103

தொடர்பு காரணமாக அரசியல் தொடர்பையும் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு

இந்த அடிப்படையை மனத்தில் கொண்டு புரட்சிக் கவிஞரின் வாழ்க்கையைப் பார்ப்போமேயானால் ஒர் உண்மை புலப்பட்டே தீரும். அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதாவது ஒரு கட்சியில் அவர் புகுந்திருக்க வேண்டிய சூழ்நிலை அன்று இருந்தது. நாட்டின் விடுதலையை முதன்மையாகக் கருதினார் கவி அரசர் பாரதியார். எனவே, அவர் காங்கிரசில் சார்ந்தவராய், அதற்குரிய பாடல் பாடுபவராய், மிதவாதக் கட்சியினர்களை எள்ளி நகையாடுபவராய் மாறினார். இதன் எதிராக, சமுதாயத்தையும் அதன் சீர்திருத்தங்களையுமே தம் தலையாய குறிக் கோளாகக் கொண்ட புரட்சிக் கவிஞர் நாட்டைப் பற்றிக் கவலைப்படவில்லை. எனவே, நாட்டைப் பற்றிக் கவலைப்படாமல் சமுதாயச் சீர்திருத்தம் ஒன்றையே தம் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். ஆதலின் திராவிடக் கட்சியில் புரட்சிக் கவி ஒன்றிப் போனார். இந்த அளவு வரையில் கவி அரசரும் புரட்சிக் கவிஞரும் ஒரே நிலையில்தான் இருக் கின்றனர். இருவருடைய குறிக்கோளும் வெவ்வேறாக அமைந்து விட்டன. எனவே, அந்தந்தக் குறிக்கோளுக் குரிய கட்சிகளில் அவரவர் அமைந்துவிட்டனர்.

இதனையடுத்து இருவருடைய வளர்ச்சியும் வெவ் வேறு திசை நோக்கிச் சென்றவுடன் இருவருடைய அடிப்படையுமே ஓரளவு மாறத் தொடங்கி விட்டது. பாரதியைப் பற்றிப் பேசிய பேச்சில்