பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் e 105

யெல்லாம் மெய்போல் நினைத்து அவர்களுடன் அந்தச் சாத்திரங்களையும் சேர்த்துச் சாடத் தொடங்கிவிட்டார். இந் த ச் சாத்திரங்களும் இராமாயணம் போன்ற கதைகளும் அவற்றை நம்பு கின்றவர்களும் நாட்டைவிட்டு ஒழிந்தால், நன்மை தானே குடிபுகும் என்று நம்பிவிட்டார். இவை யனைத்தும் இல்லாமலுங்கூடத் தவறு செய்கின்ற மனப்பான்மை, பிறரை அடிமைப்படுத்துகின்ற மனப் பான்மை பிறருக்குத் தீங்கு செய்து வாழ்கின்ற மனப் பான்மை மனிதனுக்கு இயல்பாக உள்ளது என்ற முறையில் சிந்திக்காமல் பழமை என்று சொல்லப் பெற்ற எவற்றையுமே சாடி ஒழிக்க வேண்டுமென்ற முறையில் புகுந்து விட்டார் புரட்சிக் கவிஞர்.

இதற்கேற்ப ரஷ்யாவில் தோன்றிய புரட்சியும், இப் புரட்சிக்குத் தலைவனான லெனின் கொள்கை களும் பாரதிதாசன் மனத்தில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கின்றன. புரட்சிக் கவிஞரும் புரட்சி செய்ய வேண்டுமென்று விரும்பினார். லெனினும் புரட்சி செய்தார். எனவே, புரட்சி என்ற அளவில்அதுவும் சமுதாயத்தைச் சீர்திருத்துகின்ற அளவில்லெனின் செய்கைகள் பாரதிதாசனுக்குப் பெரிதும் ஈடுபாட்டை நல்கின. இதில் வேடிக்கை என்ன வென்றால், லெனினுடைய புரட்சியில் பாரதியாரும் முதலில் ஈடுபட்டார். என்றாலும், வன்முறையை அடிப்படையாகக் கொண்ட அந்தப் புரட்சி நிலை பெற முடியாது என்பதை இறுதியில் கண்டு, அதனால் புதியதோர் ஆட்சி முறையை மக்களிடையே வன்மை யாகப் புகுத்தலாமே தவிர, அஃது இயல்புடையதாக அமையாது என்ற உண்மையைச் செல்வம்' என்ற கட்டுரைகளில் பாரதியார் எழுதியுள்ளார், -