பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 அ. ச. ஞானசம்பந்தன்

ஆனால், பாரதிதாசனோ வெனில் லெனினுடைய புரட்சியின் அடிப்படையில் உள்ள அரசியல் கோட்பாடு பற்றிக் கவலைப்படாமல் அப்புரட்சியின் ஒரு பகுதி யாகிய சமுதாயப் புரட்சி ஒன்றையே பெரிதும் ஏற்றுக் கொண்டார். அச் சமுதாயப் புரட்சிக்கு மக்களின் பழைய நம்பிக்கைகளைத் தகர்த்தெறிய வேண்டு மென்றே லெனின் விரும்பினார். சமுதாயப் புரட்சி செய்ய விரும்புகின்ற அனைவரும் இதை ஒரு கருவி யாகக் கொள்ளுவர் என்பதில் ஐயமே இல்லை. ரூஸோ, லெனின், இன்றைய சீன நாட்டு மா-சே-துங் ஆகிய அனைவரும் மக்களின் நம்பிக்கைகளைத் தகர்த்துவிட்டுப் புதிய முறையில் சமுதாயத்தை அமைக்க வேண்டுமென்று விரும்பினர். இதற்கு இடையூறாக இருப்பது மக்களுடைய மனத்தில் ஆழப் பதிந்து அவர்கள் குருதியில் கலந்துவிட்ட சமய உணர்ச்சியே என்பதைக் கண்டனர். இந்தச் சமய உணர்ச்சியைப் போக்கினாலொழியத் தம்முடைய புதிய கருத்துகளை மக்கள் மனத்தில் ஊன்ற முடியாது என்று கருதிய லெனின், சமயம் மக்களுக்கு அபின் Gustair pargob (Religion is the opium of the people)' என்று கூறிச் சென்றார். -

சமுதாயப் புரட்சி செய்ய விரும்பிய பாரதிதாச னுக்கு லெனினுடைய இந்த்ச் சொற்கள் தாரக மந்திரமாக அமைந்து விட்டன. எனவே, த்மிழ் நாட்டில், தமிழரிடத்தில், தமிழர் வாழ்வில் உள்ள தவறுகளை, குறைகளைப் போக்க வேண்டுமானால் தமிழர்கள் சமய நம்பிக்கையிலிருந்து விடுபட வேண்டு மென்ற முடிவுக்கு வந்தார் புரட்சிக் கவிஞர். இந்த முடிவு சரியா, தவறா என்பது இங்கு ஆராய்ச்சி