பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் 0 107

அன்று. சரியோ தவறோ இந்த முடிவுக்கு ஒருவர் வந்துவிட்ட பிறகு இதனையடுத்து வருகின்ற முடிவுகள் தருக்க முறையில் நியாயமானவை.

சமயம் ஒழிய வேண்டும்; சமயத்தின் ஆணி வேர்ாக இருக்கின்ற நம்பிக்கைகள் ஒழிய வேண்டும்; இந்த நம்பிக்கைகளை வளர்ப்பதற்குரிய சாத்திர புராண, இதிகாசப் பகுதிப் பாடல்கள் ஒழிய வேண்டும்; சாத்திர, புராண, இதிகாசங்கள் பெரும் பாலானவை வடமொழியில் இருக்கின்றன. எனவே, வடமொழியும் ஒழிய வேண்டும். வடமொழிக் கலப்பினால் தமிழ் மொழி பாதிக்கப்பட்டது என்ற கருத்துடையவர் ஆதலின் வடமொழியையும் எதிர்த்துச் சாடினார். வடமொழி என்றுமே எந்த நாட்டாராலும் பேசப்படுகின்ற மொழியாக இருந்த தில்லை. என்றாலும், வடமொழியையும் வட நாட்டாரையும் ஆரியம், ஆரியர் என்ற அடிப்படையில் குறிப்பிட்ட புரட்சிக் கவிஞர், இந்தச் செல்வாக்கும் நாட்டைவிட்டு ஒழியவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். இதில் வேடிக்கை என்னவென்றால், இவையனைத்தையும் முழுமனத்தோடு கவிஞர் நம்பினார் ஆதலின், சமய அடிப்படையில் தோன்றிய தமிழ் இலக்கியங்களைக் கூட வெறுத்து ஒதுக்கினார். சமய இலக்கியம் அவரால் போற்றிப் புகழப்படுபவை தமிழ் மொழியில் இருப்பினும் கூட அவையும் நாட்டிற்கு நலிவு செய்பவையே என்று கருதினார். சமயம் என்று சொல்லக்கூடிய களர் கிலத்தில் கட்ட தமிழ்ப் பெருநூல்கள் எல்லாம் இதுவரைக்கும் பயன் தரவில்லை என்று பாடினார். . . . . . . . . . . .