பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 அ அ ச ஞானசம்பந்தன்

தமிழருக்கு ஊறு செய்பவை என்ற பொது நோக்கில் இதனைப் பாடினாரே தவிர, இவற்றையும் கவிஞர் நன்கு கற்றிருந்திருக்கிறார் என்பதில் ஐயம் இல்லை. எனவே, இவை பயனற்றவை என்று ஒரு பாடலில் பாடினாலும் மற்றொரு பாடலில் 'தேவாரம் திருவாய் நன் மொழியான தேன்' என்றும் பாடுகிறார்.

இதிலிருந்து கவிஞரின் மனநிலையை நாம் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. தமிழில் இயற்றப்பட்ட எதுவாக இருப்பினும்- அது சமய இலக்கியமாகக்கூட இருப்பினும்- தமிழாக இருக்கின்ற காரணத்தால் கவிஞர் அதில் ஈடுபட்டிருக்கிறார். அவரையும் அறியாமல் அதனைத் தேன்' என்று சொல்லுகின்ற அளவுக்குச் சென்றிருக்கிறார். எனவே, அவருடைய தமிழ்ப்பற்று ஏனையோர் பற்றைப்போல் மேடைப் பற்றாக, சொற்பொழிவுப் பற்றாக பிறரை ஏமாற்றுகிற பற்றாக அமையாமல், உண்மையிலேயே உயிர்ப் பற்றாக இருந்தது என்பதையும் அறிந்து கொள்ள முடிகின்றது. கம்பன் கவிதை முழுவதும் நாட்டிற்கு ஊறு செய்பவை என்று பாடுகிறார் ஓர் இடத்தில்: அப்படி நாட்டிற்கு ஊறு செய்கின்ற ஒன்றில் ஒருவர் பல பாடல்களை நீக்கிவிட்டு இவைதாம் கம்பனுடைய பாடல் என்று சொன்னால், நூல் முழுவதுமே வேண்டாவென்று சொல்லுகின்ற கவிஞனுக்கு ஏன் இதில் சினம் பிறக்கவேண்டும்?... இராமன் கதை கவிஞருக்குப் பிடிக்காமல் இருந்திருக்கல்ாம். ஆனால், 'மேவாது இதனைச் செய்ய இந்தக் கொம்பன் யார் எனக் கேட்க ஆள் இலையா புலவர் கூட்டம் தன்னில்?' என்று. பேசும்பொழுது தமிழ்ப் பாடல்