பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் e 109

அவரை ஆட்கொண்டிருக்கிறது என்பதில் ஐயமே இல்லை.

இறுதியாக ஒன்றை நன்கு மனத்தில் இருத்த வேண்டுகிறேன். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் தெய்வ நம்பிக்கையோ, சமய நம்பிக்கையோ இல்லாதவர் என்று நினைப்பதைவிடப் பெருந் தவறு அவருக்கும், தமிழுக்கும், தமிழருக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் வேறு செய்ய முடியாது. உண்மை யில் அவர் கடவுள் நம்பிக்கை உடையவரே கடவுள் நம்பிக்கை உடையவர் என்று சொன்ன வுடன் ஊரிலுள்ள காளி, மூளி, காட்டேரி, சங்கிலிக் கருப்பன் ஆகிய அனைத்தையும் நம்பி, ஆடு அறுத்து பூசை போடுகிறவர்களோ அல்லது கோயிலுக்குச் சென்று பால் அபிஷேகம் செய்து சகஸ்ரநாம அர்ச்சனை செய்கின்றவர்களோதாம் கடவுள் பக்தி உடைய வர்கள் என்று தயவு கூர்ந்து யாரும் நினைத்துவிட வேண்டா. இவை அனைத்தையும் செய்கின்றவர்கள், ஊர் அறியச் செய்கின்றவர்கள், மாதந்தோறும் விடாமல் செய்கின்றவர்கள் கடவுள் பக்தி என்பதைக் கனவிலும் கருதாத வெளிவேடக்காரர்களாக இருக் கலாம். இதன் எதிராக இப்படி ஒன்றையும் நம்பாத புரட்சிக் கவிஞர் இவையெல்லாம் வெளிவேடம் என்று நம்புகிற கவிஞர், மக்கட் பண்பு இல்லாமல், பிறரிடத்தில் அன்பு இல்லாமல், அவற்றையெல்லாம் செய்கின்றவர்கள் தம்மையும் பிறரையும் ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்று உறுதியாக நம்புகிறார்.

பாரதிதாசன் கண்ட கடவுள் நம்முடைய

முன்னோர்கள் சொல்லிய அதே கடவுள்தான். கடவுள் என்ற பெயரிலேயே பாரதிதாசன் கண்ட