பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 0 அ. ச. ஞானசம்பந்தன்

பொருளும் அடங்கியிருக்கிறது. வாக்கு, மனம், கற்பனை ஆகிய அனைத்தையும் கடந்து நிற்கின்ற காரணத்தால்தானே அப் பொருளுக்குக் கடவுள் என்று நம் பழந்தமிழர் பெயரிட்டார்கள்? எல்லாவற்றையும் கடந்து நிற்கின்ற பொருளுக்கு ஒரு பெயரும், ஊரும் வடிவமும் உருவமும் தந்து மனைவி என்றும் மக்கள் என்றும் சொல்வது எத்துணை அறியாமையுடையது! இவ்வாறு சொல்வதெல்லாம் அன்பினால் சொல்லப்படுகின்ற உபசார வழக்கேயன்றி வேறில்லை என்ற பேருண்மையைத்தான் மாணிக்கப் பெருமான் 'ஒரு நாமம் ஒர் உருவம் ஒன்றும் இலாற்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்ட்ாமோ" என்று பாடுகிறார். வாக்கு, மனம், லயம் கடந்த பரம்பொருள்' என்று பேசுகிறார் தாயுமானவர். இத்தகைய ஒரு பரம்பொருளை, அனைத்தையும் கடந்து நிற்கின்ற முழுமுதற் பொருளை, இன்று பலரும் 'நாத்திகர்’ என்று வாய் கூசாமல் சொல்லு கின்ற புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனார் இதோ பாடுகிறார்: -

சீருடைய நாடு- தம்பி திராவிட நன்னாடு பேருடைய காடு- தம்பி பெருக் திராவி டந்தான் ஓர்"கடவுள் உண்டு- தம்பி உண்மை கண்ட கர்ட்டில் பேரும் அதற் கில்லை- தம்பி பெண்டும் அதற் கில்லை தேரும் அதற் கில்லை- தம்பி