பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் 0 111

சேயும் அதற் கில்லை ஆரும் அதன் மக்கள்- அது அத்த னைக்கும் வித்து உள்ளதொரு தெய்வம்- அதற் குருவ மில்லை தம்பி.

(கவிதைத் தொகுதி-3 ஏற்றப் பாட்டு-55)

மேலும் சமய நம்பிக்கைகளின் அடிப்படையில் அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஒவ்வாத அத்தைப் பாட்டிக் கதைகளைச் சொல்லி, 'இவையெல்லாம் நம்புகின்றாயா, இன்றேல் நரகம் சித்திக்கும்’ என்று பேசும்போது கவிஞர் சீறுகிறார். இதன் எதிராகக் கடவுள் தத்துவத்தை யாரேனும் பாடினும் அவை தமிழ்ப் பாட்டாக இருப்பின் கவிஞர் தம்மை மறந்து ஈடுபடுகிறார். மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழில் "தொடுக்கும் கடவுட் பழம் பாடல் தொடையின் பயனே' என்று தொடங்கும் ஓர் அற்புதப் பாடல் உண்டு. அப் பாடவில் நாத்திகர் என்ற பட்டம் சூட்டப்பெற்ற பாவேந்தர் பாரதிதாசனார் ஈடுபடு கிறார். அப் பாடலின் சுவையில், பொருள் ஆழத்தில் தம்மை மறந்த கவிஞர் இதோ பாடுகிறார்:

குமரகு ருபரன் பாடல் கூறிப்பின் பொருளும் கூறி, அமரரா தியர்வி ருப்பம் ஆம்படி செய்தான்; மற்றோர். அமுதப்பாட் டாரம் பித்தான், அப்பாட்டுக் கிப்பால் எங்கும் சமானமொன் றிருந்த தில்லை சாற்றுவோம் அதனைக் கேட்பீர்