பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 e அ. ச. ஞானசம்பந்தன்

என்று பாடுகிறார். இப்பாடலைக் குமரகுருபரர் பாடியவுடன் இப் பாடலில் ஈடுபட்டு மறுபடியும் ஒரு முறை இப் பாடலைப் பாடுக என்று பணித்தாளாம். குழந்தை வடிவத்தில் வந்த மீனாட்சியம்மை.

என்றந்தப் பாடல் சொன்னான் குருபரன் ! சிறுமி கேட்டு கன்றுகன் றென இ சைத்தாள்: நன்றெனத் தலைஅ சைத்தாள்; இன்னொரு முறையுங் கூற இரந்தனள், பிறரும் கேட்கப் பின்னையும் குரு பரன்தான் தமிழ்க்கனி பிழியுங் காலை, பாட்டுக்குப் பொருளாய் நின்ற பராயரச் சிறுமி, நெஞ்சக் கூட்டுக்குக் கிளியாய்ப் போந்து கொஞ்சினாள் அரங்கு தன்னில் ஏட்டினின் றெழுத்தோ டோடி இதயத்துட் சென்ற தாலே, கூட்டத்தில் இல்லை வந்த குழந்தையாம் தொழும் மாட்டி

தமிழையே பிழிந்தெடுத்துச் சாறாக்கித் தந்த இந்தப் பாடலைக் கேட்டவுடன் பிராட்டி மறைந்துவிட்டா ளாம். கடவுள் நமபிக்கை இல்லாதவர்' என்று அறியாமை உடையவர்களால் பட்டம் சூட்டப்ப்ெற்ற பாவேந்தர் இந்த நிகழ்ச்சியை நினைந்து சிந்தித்து அனுபவித்து இதோ பாடுகிறார்: