பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் 0 118

ஏட்டினின் றெழுத்தோ டோடி இதயத்துச் சென்ற தாலே கூட்டத்தில் இல்லை வந்த குழந்தையாம் தொழும்சி மாட்டி,

கடவுள் நம்பிக்கை இல்லாதவரா தொழும் சீமாட்டி’ என்ற சொல்லைப் போட்டிருப்பார்! இந்தச் சந்தர்ப் பத்தைப் பாடுகின்ற அந்த நேரத்தில் சமயம் என்ற பெயரில் நடைபெறும் சாக்கடைப் பழக்கவழக்கங் களையெல்லாம் மறந்துவிட்டு உண்மைச் சமய நெறியை நம்புகின்ற கவிஞர் தம்மையும் மறந்துதான் "தொழும் சீமாட்டி என்ற சொல்லைப் போடு கிறார். -

அப்படியானால் நூற்றுக் கணக்கான இடங்களில் சமயத்தைத் தாக்குகிறாரே, பழக்கவழக்கங்களைத் தாக்குகிறாரே என்று கேட்கப்படலாம். தாக்குவது உண்மைதான். ஆனால், எதனைத் தாக்குகிறார்? சமயம் என்ற பெயரில் சமயம் என்ற அடிப்படை உணராதவர்கள் பேசுகின்ற பைத்தியக் காரக் கதை களையும் முட்டாள்தனமான நம்பிக்கைகளையும் தாக்குகிறார் என்பது உண்மை. பெரியோர்கள் யார் தாம் இதனைத் தாக்கவில்லை? பழுத்த சமய வாதியாகிய இராமலிங்க வள்ளல்,

கலைஉரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும் கண்மூடி வழக்க மெலாம் மண்முடிப் போக

என்று பேசுகிறார். இவரைவிடப் பழுத்த கிழவராகிய நாவுக்கரசப் பெருமான் கங்கை ஆடில் என்? காவிரி ஆடில் என்? என்றும் சாத்திரம் பல பேசும் சழக்கர் காள், கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்?' என்றும் பேசுகிறார். இவர்களெல்லாரும்