பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 ம் அ. ச. ஞானசம்பந்தன்

நாத்திகர்களா? அடிப்படையில் பெரும் நம்பிக்கைக் கொண்டுள்ள பெரியவர்கள்தாம் அந்த அடிப் படையை மூடி மறைத்து அதன்மேல் குப்பைகள் கொட்டப்படும்பொழுது உண்மையில் வருத்தப்படு வார்கள். அடிப்படையை அறியாமல் மேலே கொட்டப்பட்ட குப்பைகளையே மெய் என்று எண்ணி அடிப்படையை ஒதுக்க முற்படுகின்றவர்களைப் பார்த்து ஏசுவர்ர்கள்.

புரட்சிக் கவிஞர். இளமையில் முதன் முதலாகக் கவியரசர் பாரதியாரைச் சந்தித்த்பொழுது பாடிய முதற் பாடல் சக்தியை வியந்து பாடியதாகும். முழு முதற் பொருளை, நாம ரூபம் கடந்த பொருளை, ஆற்றலின் வடிவாகக் காண்பதே முந்தையோர் கண்ட முடிவாகும். பிற்காலத்தில் அறிவில் குறைந்த மக்களுக்கு உண்மையை ஓரளவு புலப்படுத்த வேண்டிப் பலப்பல கதைகளின் மூலம் அறிவு கொளுத்தத் தொடங்கினர். கதைகளைக் கேட்ட மக்கள், கதைகளினால் கற்பிக்கப்படுகிற உண்மை களை மறந்து கதைகளையே மெய்யென கம்ப லாயினர். இதனால் வந்த பெருங்கேடு ஒன்றுண்டு அக் கேட்டைப் போக்குவதற்காகவே சமயாசாரி களும், ஆழ்வார்களும் கதைகளைக் கூறும்பொழுது அவற்றின் உட்பொருளையும் உடன் சேர்த்துக் கூறிப் போயினர். எனவே, முழு முதற்பொருள் ஆற்றல் வடிவானது என்ற பழைய கருத்தை, நாம ரூபம் கடந்தது என்ற பழைய கருத்தைப் பாவேந்தர் பாரதிதாசனார். தமது முதற்பாடலில் பாரதியின் எதிரே பாடிக் காட்டினார். பாடல் வருமாறு: -