பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 ல் அ. ச. ஞானசம்பந்தன்

எளிதில் கண்டு கொள்ள முடியாததும் ஆகிய கடவுட் பற்றுக் கொண்டவராக இருந்திருக்கிறார் என்பத்ை அறுதியிட்டுக் கூறலாம். புரட்சிக் கவிஞரை "நாத்திகர்' என்று சொல்வது எவ்வளவு தூரம் உண்மை என்ற வாதத்திற்கு இந்த அள்வுடன் ஒருவாறாக ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, இனி அவருடைய கவிதைகளில் புகுந்து மனநிலையைக் காண முற்படலாம். - - -

கவிதைத் தொகுதி - 1

புரட்சிக் கவிஞரின் தனிக்கவிதைகள் மூன்று. தொகுப்புக்களாக வெளியிடப் பெற்றுள்ளன. இவற்றுள் முதல் தொகுப்பில் காவியம், இயற்கை. காதல், தமிழ், பெண்ணுலகு முதலிய பல தலைப்பு: களில் தனித் தனியாகக் கவிதைகள் தொகுக்கப் பெற்றுத் தரப் பெற்றுள்ளன. காவியம் என்ற பெயரில் சஞ்சீவ பர்வதத்தின் சாரல்’, 'புரட்சிக் கவி', 'வீரத் தாய்' என்பன இடம் பெற்றிருப்பினும் இவையும் சிறுகதைகளைக் கவிதையாகப் புனைந்த முறையேயாகும். என்றாலும், ஒரு காவிய அடிப்படை யில் வர்ணனைகள் இட்ம் பெறுகின்றன. சிறுகதையில் ஒரே ஒரு நிகழ்ச்சியும் அதற்குரிய உணர்ச்சியும் இடம் பெறும். இவருடைய மேலே கூறிய மூன்று பகுதி. களிலும் பல உணர்ச்சிகள், பல நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. முதலில் உள்ள சஞ்சீவி பர்வதத்தின் சாரல் கதைக் கட்டுக்கோப்பு இல்லாத ஒரு பகுதி, யாகும். இன்பச் சுவை மிகுந்து காணப்படும் இப் பகுதியில் உள்நோக்கம் கருதிச் சொல்லப்படும் கதை களில் வரும் உள்நோக்கை மறந்து, கதையையே மெய்.