பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 அ. ச. ஞானசம்பந்தன்

பிற்காலத்தில் வடமொழியில் தோன்றிய எதனை யும் சினந்து சாடுகின்ற கவிஞர் அற்றை நாளில் வடமொழியிலுள்ள பில்கணியம்' என்ற சிற்றிலக் கியத்தைக் கற்று அதன்மாட்டு அன்பு கொள் கிறார். நம் நாட்டிலுள்ள அம்பிகாபதி கதை'

போலவே வடநாட்டில் வழங்குகின்ற கதை. பில்கணியம். இப்பகுதியைப் புரட்சிக்கவி என்ற தலைப்பில் பாடவந்த கவிஞர் வளமையான

அகவற்பா முறையையும் பஃறொடை வெண்பா முறையையும் அதனை அடுத்துத் தோன்றிய விருத்தப்பா முறையையும் மிகச் சமீப காலத்தில் தோன்றிய நொண்டிச்சிந்து, கும்மிப்பாட்டு வகையை யும் பயன்படுத்தித் தம் கவிதைத் திறத்தை எந்தெந்தத் துறைகளில் காட்ட முடியும் என்பதை நிறுவியுள்ளார். இதிலுள்ள தனிச்சிறப்பு யாதெனில் அகவற்பா, பஃறொடை வெண்பா என்ற வகைப் பாடல்களிலும் கூட மிக எளிய சொற்களை வைத்து இப் பழைய பாவின முறைகளைக் கையாள்கிறார். அகவ்ல் என்பது கவிஞன் விருப்பம்போல் விரிந்து கொடுக்காத பா முறையாயினும் ஒசையால் சிறப்புப் பெற்று விளங்குவதாகும். இதனை நன்கு கையாண் டுள்ள புரட்சிக் கவிஞர் பழமை பாராட்டும் பண்பை யும் காட்டுகிறார். இலக்கண அறிவு இல்லாமலே கவிதை புனைய முடியும் என்று இக் காலத்தில் பேசுபவர்களை எள்ளி நகையாடுபவர் போல்,

- என்மகள் அகத்தில் எழுந்த கவிதையைப் புறத்தில் பிறர்க்குப் புலப்படுத் துதற்குச் செய்யுள் இலக்கணம் தெரிதல் வேண்டுமாம்