பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் e 118

இந்த இரண்டு அடிகளில் கவிஞர் ஒரு பேருண்மை யைத் தெரிவிக்கின்றார். உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிகளை வெளியிடுவதுதான் கவிதை எனினும் அவ் வெளியீட்டைச் சொற்களின் மூலமே செய் கின்றோம். சொல்லைப் பயன்படுத்தி உள்ளத்து உணர்வை வெளியிட வேண்டுமானால், அதற்குச் சில வரம்புகள் வேண்டும். கவிதைக்கு இலக்கணம் ஆகிய வரம்பு இல்லையானால், அது மரபு பிறழ்ந்துவிடும். மரபு பிறழ்ந்தால், தவறு என்ன என்று கேட்பவர் களை நோக்கி, மரபு பிறழ்ந்தால் பிறர் உங்களுடைய கருத்தை அறிந்து கொள்ள முடியாது என்று ஒரே வரியில் விடை கூறிவிடலாம். அரசனுடைய மகள் மனத்தில் கவிதை உணர்ச்சி வடிவாக இலங்குகிறது என்ற உண்மையையும், அந்த உணர்ச்சியை வெளியிட (புறத்தில் பிறருக்குப் புலப்படுவதற்கு) மரபோடு கூடிய இலக்கண அறிவு வேண்டுமென்ற உண்மையை யும் அறிவிக்கின்றார்.

இயற்கையில் என்றும் நடைபெறும் நிகழ்ச்சிகளை தாமும் காண்கிறோம்; கவிஞனும் காண்கிறான். கதிரவன், இளமதி முதலியவற்றின் தோற்றம் நாம் அன்றாடம் காண்கின்ற காட்சிதான். என்றாலும், விடியற்கால நேரத்தில் கடல் முகட்டில் புறப்படுகின்ற கதிரவன் தன்னுடைய நெருப்புத் தன்மை தணிவதற் காகக் கடலில் குளித்துக் கொஞ்சம் கொஞ்சமாகச் சந்திரன் என்ற வடிவில் புறப்படுகிறான் என்று நம்மில் யாரேனும் சிந்தித்தது உண்டா? மேலும், உலகில் உள்ள அழகை யெல்லாம் ஒன்று திரட்டி அதற்கு ஒரு குளிர்ச்சியையும் தந்து ஆகாயத்தில் விட்டதே முழு நிலவாகும் என்று நம்மில் யாரேனும் நினைத்தது உண்டா? நம் மனத்தில் தோன்றாத