பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 e அ ச ஞானசம்பந்தன்

இத்தகைய எண்ணங்கள் கவிஞனுடைய மனத்தில் தோன்றுகின்றன. அவ்வாறு தோன்றும்பொழுது அவற்றைக் கற்பனை என்று சொல்கிறாம். பாவேந்தரின் கற்பனைத் திறத்திற்கு, அதுவும் அவருடைய இளமைக் காலக் கற்பனைத் திறத்திற்குப் "புரட்சிக்கவி என்ற பகுதியில் வரும் இவ்விரண்டு பாடல்களும் நல்ல எடுத்துக்காட்டாகும்:

லேவான் ஆடைக்குள் உடல்ம றைத்து

கிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமு கத்தைக் கோலமுழு தும்காட்டி விட்டால் காதற்

கொள்ளையிலே இல்வுலகம் சாமோ வானச் சோலையிலே பூத்ததனிப் பூவோ தேர்ன்

சொக்கவெள்ளிப் பாற்குடமோ அமுத ஊற்றோ காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்

கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பி ழம்போ?

அந்தியிரு ளாற்கருகும் உலகு கண்டேன்;

அவ்வாறே வான்கண்டேன்; திசைகள் கண்டேன் பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ? -

பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ கிலவே தோன்? சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம்

சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி இந்தாவென் றே இயற்கை அன்னை வானில்

எழில்வாழ்வைச் சித்தரித்த வண்ணக் தானோ?

எந்தக் கவிஞனும் அந்தப் பெயருக்குத் தகுதி யுடையவ்னாக அவன் இருத்தல் வேண்டுமெனில், அச்சத்தைப் போக்கி, சிறந்த மனத் திடம் கொண்ட