பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் 6 121

வனாக இருத்தல் வேண்டும். தீமையைக் கண்டு அஞ்சுபவன் நம் போன்ற சராசரி மனிதன். தீமை யைக் கண்டு அஞ்சினாலும் அதனைப் போக்கவேண்டு மென்று நினைப்பவன் நம்மைவிட ஒரு படி மேம் பட்டவன். ஆனால், அதனைக் கண்டு அதன் கொடுமையை உணர்ந்து, அதனை எதிர்த்து நின்று, பொருது அழிக்க வேண்டுமென்ற நெஞ்சுரத்தோடு போராடுபவன் கலைஞன். இத்தகைய கொடுமை களை எதிர்த்துப் போராடும் பொழுது பெரியோர்கள் எத்துணைத் துன்பம் வந்தாலும் எதிர்த்துப் போராடு வார்கள், அஞ்சமாட்டார்கள் என்ற பேருண்மையைக் கவிஞர் இதோ பேசுகிறார்:

நேர் இருத்தித் தீர்ப்புரைத்துச் சிறையிற் போட்டால் கிறைதொழி லாளர்க ளுணர்வு மறைந்து போமோ?

பாவேந்தரின் ஒசை நயம் எவ்வளவு சிறப்பு உடையதோ அவ்வளவு சிறப்புடையன அவருடைய உவமைகளும் உருவகங்களும். சங்க இலக்கியத்தில் ஆழ்ந்து பயின்றுள்ள பாவேந்தர் தொட்ட இடமெல் லாம் சங்கப் பாடல்களின் கருத்துக்களையும் உவம உருவகங்களையும் கையாள்கின்றார். தன்னை விட்டுப் பிரிந்து செல்லுகின்ற தலைவன் மழைக் காலத்தில் இருட்டில் நடந்து செல்கிறான். எனவே, அவனுடைய பாதங்கள் நோகுமே என்று வருந்துகின்ற தன் மனத்தைத் தலைவி ஒருத்தி உருவகப்படுத்தி, தோழி! என்னுடைய மனம் என்னிடம் இல்லை. தலைவனுடைய திருவடிகளைத் தாங்கிக்கொண்டு அவனுடைய கால் செருப்புப்போல் அவன் பின்னேயே