பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 0 அ. ச. ஞானசம்பந்தன்

சென்றுவிட்டது' என்று பேசுகிறாள். அகநானூற்றில் (128)வரும், .

மன்றுபா டவிந்து மனைமடிக் தன்றே கொன்றோர் அன்ன கொடுமையோ டின்றே யாமங் கொளவரின் கனை இக் காமங் கடலினும் உரை இக் கரைபொழி யும்மே எவன்கொல் வாழி தோழி மயங்கி இன்ன மாகவும் நன்னர் கெஞ்சம் 'என்னொடும் நின்னொடுஞ் சூழாது கைம்மிக்கு இறும்புபட் டிருளிய இட்டருஞ் சிலம்பிற் குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக் கான காடன் வருடம் யானைக் கயிற்றுப்புறத் தன்ன கன்மிசைச் சிறுநெறி மாரி வானக் தலைஇ நீர்வார்பு - . இட்டருங் கண்ண் படுகுழி இயலின் இருளிடை மிதிப்புழி நோக்கியவர் தளரடி தாங்கிய சென்ற தின்றே

என்ற உருவகம் கவிஞர் வாக்கில்,

ஆதரவு காட்டாமல் ஐயா எனைவிடுத்தால் பாதரட்சை போலும்உன்றன் பாதம் தொடர்வதன்றி வேறு கதிஅறியேன்.

என்று உருப்பெறுகிறது.

அதே பாடலின் மற்றொரு பகுதியில் நாம்

பேசும் உவமையை அதன் குறிை அறிந்து மாற்று. கிறார். சாதாரணமாக உலக இயலில் 'ஆயிரம்