பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 e அ. ச. ஞானசம்பந்தன்

என்று பாடிவிட்டுக் கவியரசர் பாரதியார் தமிழ் நாட்டில் தோன்றிய காலம் மிகப் பொருத்தமானது என்று பேசுகிறார். மேலும்,

தமிழரின் உயிர்கிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால் இமைதிற வாமல் இருந்த நிலையில் தமிழகம் தமிழ்க்குத் தகும்உயர்வு அளிக்கும் தலைவனை எண்ணித் தவம்.கிடக் கையில் இலகு பாரதிப் புலவன் தோன்றினான். பைந்தமிழ்த் தேர்ப்பாகன் ! அவன் ஒரு செந்தமிழ்த் தேனீ! சிந்துக்குத் தந்தை கற்பனை ஊற்றாம் கதையின் புதையல் திறம்பாட வந்த மறவன்; புதிய அறம் பாட் வந்த அறிஞன், நாட்டில் படரும் சாதிப் படைக்கு மருந்து மண்டும் மதங்கள் அண்டா நெருப்பு அவன்

என்றும்,

தமிழால் பாரதி தகுதி பெற்றதும் தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும் எவ்வாறு என்பதை எடுத்து உரைக்கிறேன்

என்றும் தம் ஆசானுக்குப் புகழ் மாலை சூட்டுகிறார் கவிஞர்.

இவையல்லாமல் பாரதியின் பாடல்கள் பலவற்றைத் தனித்தனியே எடுத்துப் பாராட்டு கிறார். அடுத்துள்ள தேன் கவிகள் தேவை என்ற