பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 டு அ. ச. ஞானசம்பந்தன்

மறைந்தோடவில்லை; நான் இன்றும் இருப்பதி னாலே' என்று பேசும் பாவேந்தர், பாரதி இதனை வெறும் வாய்ப்பறையாகச் சொல்லவில்லை என்பதை எடுத்துக்காட்டுவதற்காக மூன்றாவது பாடலில் அரிஜனங்கள் என்று சொல்லப்படுபவர்கள் சமைத்த உணவை நான்கு தெருக்கள் கூடும் நாற்சந்தியில் அனைவரும் தம்மைக் காணுமாறு உண்டார் என்று பேசுகிறார்.

தம்முடைய ஆசான்ாகிய பாரதி பாண்டிச் சேரியிலோ தமிழ்நாட்டிலோ உள்ளவர்கள்மட்டும் அறிந்து அனுபவிக்க வேண்டிய கவிஞர் அல்லர் என்ற கருத்தை மகாகவி' என்ற தலைப்பில் இதோ பேசு கிறார்:

பாரதியார் உலககவி அகத்தில் அன்பும் பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர் ஓர்ஊருக்கு ஒருநாட்டுக்கு உரியதான ஒற்றைச்சாண் நினைப்புடையர் அல்லர் மற்றும் வீரர் அவர்

என்று கூறிவிட்டு, இதனையடுத்து அமரகவியின் உள்ளத்தை விரிவுற எடுத்துக்காட்டி உணர்ச்சிப் பிழம்பான அவருடைய பாடல்கள் பிற மொழியில் மொழி பெயர்க்க முடியாத ப்ேராற்றல் வாய்ந்தவை என்ற கருத்தைத் .

தராதலத்துப் பாஷைகளில் அண்ணல் தந்த தமிழ்ப் பாட்டை மொழிபெயர்த்தால் தெரியும்சேதி.

என்றும்,