பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் 0 128

ஞானரதம் போல்ஒருநூல் எழுது தற்கு கானிலத்தில் ஆளில்லை. கண்ணன் பாட்டுப் போல் கவிலக் கற்பனைக்குப் போவ தெங்கே புதிய நெறிப் பாஞ்சாலி சபதம் போலே தேன் இனிப்பில் தருபவர் யார் ?

என்று பாடி வியக்கின்றார் கவியரசர் பாடலைப் பாவேந்தர் பாரதிதாசனார். -

கவிஞருடைய உள்ளத்தைக் கவர்ந்ததான சாதி ஒழிப்புப் பணியில் உயர்குலம் என்று சொல்லப் படுகின்ற குலத்தில் பிறந்த பாரதியார் முழுமூச்சாக இறங்கிச் சாதி ஒழிப்புப்பற்றிப் பாடியதோடுமட்டு மல்லாமல் செயலிலும் அதனைச் செய்து காட்டினார் என்பதை நினைக்கும்பொழுது பாவேந்தரின் உள்ளம் பரவசம் அடைகிறது.

தேசத்தார் கல்லுணர்வு பெறும்பெ ருட்டுச் சேரியிலே காள்முழுவதும் தங்கி உண்டார் காசுதந்து கடைத்தெருவில் துலுக்கர் விற்கும் சிற்றுணவு வாங்கிஅதைக் கனிவாய் உண்டார்

என்று பேசும்பொழுது பாரதியார் தம் கொள்கை யைக் கவிதையாக மட்டும் வடித்துக் கொடுக்காமல் வாழ்விலேயும் கொண்டுசெலுத்திய மாபெரும் சிறப்பைப் பாவேந்தர் பாடிப் பரவசம் அடைகிறார்.

இவ்விரண்டாம் தொகுதியில் 'இசைபெறு திருக் குறள் என்ற தலைப்பில் வள்ளுவர்தம் வாய்மொழி தமிழ்நாட்டிற்கே உரிய தனிச் சொத்து என்றும்