பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 e அ. ச. ஞானசம்பந்தன்.

அதன் உள்ளீட்டை உணராத உரையாசிரியர்கள் தவறாகப் பொருள் செய்துவிட்டார்கள் என்றும் சாடுகிறார். 'திராவிடன்’ என்ற தலைப்பில் உள்ள பல பாடல்கள் ஒரு கவிஞருக்குத் தகுதியில்லாத சொற்களால் வரம்பு கடந்து கடவுளரையும் பிறரையும் ஏசுகின்ற அளவிற்குச் செல்கின்றன. "கடவுள் வெறி, சமய வெறி, கன்னல் நிகர் தமிழுக்கு நோய் நோய் நோயே. இதுவும் பாவேந்தர் வாக்கு! இங்ங்ண்ம் பேசுகிறார் என்பதால் எதிலும் அளவு கடந்து விடாமல் உணர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்ற ஆற்றலைக் கவிஞர் இத் தொடரில் போற்றுகிறாரே, அதனைத் தாம் பெற்றாரா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். தமிழ்ப் பற்றுக் கொள்வது என்பது வ்ேறு: தேவையில்லாத முறையில் சமயம் பற்றிய இலக்கியம் என்பவற்றை வசை பாடுதல் வேறு. கவிஞரின் தமிழ்ப் பற்று, தமிழ் வெறியாக மாறி ஒரோவழி முன்னுக்குப்பின் முரண்பாடான கருத்துக்களைத் தெரிவிக்கவும் பேசவும் வாய்ப்பு அளித்துவிடுகிறது. "பிரிவுப்பத்து" என்ற தலைப்பி லுள்ள பாடலைச் சற்றுக் காண்போம்.

கேரளம் என்று பிரிப்பதுவும்- காம் கேடுற, ஆந்திரம் பிய்ப்பதுவும் சேரும் திராவிடர் சேரர் தழித்திடச் செய்திடும் சூழ்ச்சி அண்ணே- அதைக் கொய்திட வேண்டும் அண்ணே.

இங்ங்னம் աոգա அதே கவிஞர் படத் தொழில் பயன்' என்ற பகுதியில் இவ்வாறு பாடுகிறார்: