பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் e 131

செந்தமிழ் காட்டில் தெலுங்குப் படங்கள் தெலுங்கருக் கிங்கு நடிப்பெதற் காக? வந்திடு கேரளர் வாத்திமை பெற்றார் வளர்ந்திடு மோகலை அண்னே?- இங்கு மாயும் படக்கலை அண்ணே.

இதேபோல் தெலுங்கு, மலையாளம் ஆகிய இரண்டை யும் அவை வந்து தமிழ்நாட்டில் புகுந்ததையும் சாடு கின்ற இடங்கள் பல உண்டு. இவற்றை எடுத்துக் காட்டுவதால் கவிஞர் பேரில் குறை காண்பதாக யாரும் நினையவேண்டா. முன்னர்க் குறிப்பிடப்பட்ட குழந்தை உள்ளம் படைத்த கவிஞர் அந்தந்த நேரத்தில் என்னென்ன உணர்ச்சியில் ஈடுபட்டாரோ அந்தந்த உணர்ச்சியை அப்படியே பாடுகின்ற இயல்பு வாய்ந்தவர் என்பதை அறிவுறுத்தவே இதனை எடுத்துக் காட்டுகிறோம்.

கவிதைத் தொகுதி- 3

மூன்றாவது கவிதைத் தொகுப்பில் 'கடல் மேல் குமிழிகள்', 'அமிழ்து எது?’ என்ற இரண்டு பகுதிகள் பெரியனவாக அமைந்துள்ளன. கடல் மேல் குமிழிகள்" என்ற காப்பியத் துணுக்கு அவருக்கு மிகவும் பிடித்த மான சாதி, சமய வேற்றுமைகளால் விளைந்த தீமையை உணர்த்துவதே யாகும். இப்பாடலில் அவருடைய ஆசானாகிய பாரதியைப் பின்பற்றி ஆளப்பிறந்த சமுதாயம் ஆளப்படுகின்ற சமுதாயம் என்ற இரண்டினிடையே உள்ள வேறுபாட்டை எடுத்துக்காட்டி இறுதியாகத் திறல் நாட்டில்