பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 அ. அ. ச. ஞானசம்பந்தன்

குடியரசை அமைக்கிறார் கவிஞர். கவிஞர் அமைக்

கின்ற அந்தக் குடியரசு நாட்டில்,

ஒரு கடவுள் உண்டு என்போம் உரு வணக்கம் ஒப்போம்

என்று பேசுகின்றார். பார்ப்புனரும் கையில் செங்கோல் ஏந்தும் பிறரும் மக்கள்ைச் சார்ந்தோரே என்று பாடும் பொழுது பழைய வெறியோடு கூடிய கற்பனை இல்லாமல் அமைதியடைந்த மனநிலையில் என்ன செய்ய வேண்டுமென்று சிந்தித்து, இருப்ப வற்றையெல்லாம் எழுதிக் காட்ட வேண்டுமென்று நினைக்காமல் இருப்பவற்றை எங்ங்னம் செம்மை செய்து பண்படுத்திப் பயன் அடைய வேண்டுமென்ற மனநிலை நன்கு காட்சி அளிக்கிறது. அடுத்து அமிழ்து எது?’ என்ற பாடலில் வள்ளுவ்ன் மறையை அமிழ்து என்று கூறிய காரணம் விரிவாக ஆராயப்படு: கிறது. இவை இரண்டும் அல்லாமல் 'திராவிடர் திருப்பாடல்", "சமத்துவப் பாட்டு முதலியவையும் இடம் பெறுகின்றன.

குடும்ப விளக்கு

இப் பெருந்தொகுதிகளை அடுத்துக் குடும்ப விளக்கு என்ற ஒரு நூலும், கவிஞர் படைப்புக்களுள் தலைசிறந்து நிற்கிறது. 'குடும்ப விளக்கு நூல் ஐந்து பகுதிகளாகப் பல்வேறு காலங்களில் ஆக்கப் பெற்றதாக அறிகிறோம். பெருமக்களையும் வீரதீரச் செயல்களையும் வைத்துக் கவிதை பாடினால்தான்