பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் 0 138

மக்கள் ஆர்வத்துடன் படிப்பார்கள் என்று பழைய நம்பிக்கையைப் புரட்சிக் கவிஞர் குடும்ப விளக்கு" இயற்றியதால் தகர்த்தெறிந்திருக்கிறார். சாதாரண மளிகைக்கடைக்காரன் ஒருவனுடைய அன்றாட வாழ்வை அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது, "குடும்ப விளக்கு". செயற்கரிய செயல்களோ, நம்ப முடியாதவையோ, வியப்பை விளைவிக்கின்றவையோ ஆகிய எந்த ஒரு நிகழ்ச்சியும் இல்லாமல் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண மனிதனுடைய சுவையற்ற வாழ்க்கையை எடுத்துக்கொண்டு சுவை மிகுந்த காப்பியத் துணுக்காக ஆக்க முற்பட்டு, அந்த முயற்சியில் மாபெரும் வெற்றியையும் அடைந்தார் என்று சொன்னால் அதைவிடச் சிறந்த ஒரு புகழ்மாலை கவிஞருக்கு யாரும் தர இயலாது.

இத்தகைய ஒரு கருப்பொருளை எடுத்துக் கொண்டு பாடவே ஏனையோர் அஞ்சியிருப்பர். அப்படியே பாடியிருப்பினும் அது நின்றுநிலவும் ஆற்றலைப் பெற்றிராது. ஒரு கவிதை சிறப்படையக் கவிதையால் குறிக்கப்பெற்ற பொருளும் அப் பொருளைப் பாடும் கவிதையும் சிறப்பு உடையன் வாக இருத்தல் வேண்டும். இவை ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை: அங்ங்னம் அல்லாமல் உள்ளீடே இல்லாத ஒன்றை எடுத்துக்கொண்டு கவிதை புனைய முற்படுவது மாபெரும் துணிச்சல் தான். அதுவும் ஒன்று இரண்டு துண்டுப் பாடல்களா. யினும் சரியே. அவ்வாறு இல்லாமல் நீண்ட நெடுங் கதையாக அதனைச் செய்ய முற்படுவது புரட்சிக் கவிஞரின் புரட்சி மனப்பான்மைக்கும் அவருடைய பேராற்றலுக்கும் நல்லதோர் எடுத்துக்காட்டாகும்.