பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 இ. அ. ச. ஞானசம்பந்தன்

அம் முயற்சியின் பயனே குடும்ப விளக்கு' என்ற நூல்.

'குடும்ப விளக்கு’ என்ற நூல் தோன்றுவதற்குப் பல்லாண்டுகள் முன்பே இதன் கரு கவிஞர் உள்ளத்தில் தோன்றியிருக்கவேண்டுமென்று நினைக்க வேண்டி யிருக்கிறது. 1936-ல் 'தகுந்த குடும்பம் சர்வகலா சாலை' என்ற தலைப்பில் 34 கண்ணிகள் பாடியிருக் கிறார். அதில்,

பிள்ளைகளைக் கூட்டிப்போய்ப் பீடத்திலே யமைத்துப் பள்ளிக்கு வேண்டியகற் பாடங்கள் சொல்லிவிட்டு நல்ல கதையுரைத்து ஞாலப் புதுமைகளைச் சொல்லி மகிழ்வித்தாள் தாயன்பு நாதன்முதல் எல்லாரும் இன்ப உணவுண்டார் மக்களெலாம் கல்விச் சாலைசெல்லக் கட்டும்உடைப் பொத்ததெல்லாம் இல்லக் கிழத்தி எழில்தையற் காரியாய்த் தைத்துடுத்தி விட்டாள் தனது கணவனிடம் அத்தினத்தில் ஆன.பல ஆலோ சனைபேசி

என்ற வரிகள் இடம்பெறுகின்றன. இக் கருத்தே "குடும்ப விளக்கில் விரிக்கப் பெறுகிறது. இவ்வழகிய நூல் தோன்றுவதற்கே கவிஞரின் அருமை மகள் திருமதி சரஸ்வதி அம்மையார்தான் காரணம் என்று நூலின் முன்னுரை பேசுகிறது. முதற் பகுதியில் நல்ல குடும்பத்தின் ஒருநாள் நிகழ்ச்சி பேசப்படுகிறது. இப் பகுதி எழுதப்பெற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டாம் பகுதியும், அதனை அடுத்துச் சில காலங் கழித்து மூன்றாம் பகுதியும் எழுதப்பெற்ற