பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் e 135

தாக அறிகிறோம். இறுதியாக உள்ள ஐந்தாம் பகுதி "முதியோர் காதல்’ என்ற தலைப்பில் கடைசியாக எழுதப்பெற்றது. இவ்வைந்து பகுதிகளையும் ஒருசேரப் படிக்கிறவர்கள் ஒன்றை உணராமல் போக முடியாது. முதற் பகுதியாகிய ஒருநாள் நிகழ்ச்சி’ பிறர் தூண்டுதல் இல்லாமல் கவிஞர் உள்ளத்தில் நிறைந்த கற்பனையின் வெளியீடாகும். ஏனைய பகுதிகள் பிறருடைய வேண்டுகோளுக்கு இணங்கிச் செய்யப்பெற்றவை என்பதை அறியமுடிகிறது. முதற் பகுதியிலுள்ள கற்பனை ஒட்டம், சொல்லாட்சி, ஓசை நயம். உவமை நயம் முதலியவை பிற பகுதி களில் தொய்வடைந்து விடுகின்றன. இவ்வாறு கூறுவதால் பிற பகுதி சிறப்புடையன அல்லவோ என்று நினைக்கவேண்டா. இரண்டையும் ஒப்பு நோக்கும்பொழுது- ஒன்றையொன்று தரத்தால் எஞ்சி நிற்கும் அளவை நோக்கும்போது- முதற்பகுதி பிற பகுதிகளைவிடத் தரத்தால் பல மடங்கு உயர்ந்து நிற்கக் காண்கின்றோம்.

ஒரு புலவன் பல காலம் கவிதைகள் இயற்று வானேயானால் முதன்முதலில் அவன் இயற்றிய கவிதைகளுக்கும் பிற்காலத்தில் இயற்றிய கவிதை களுக்கும் உள்ள வேறுபாட்டைத் திறனாய்வாளர் ஒரளவு அறிய முடியும். செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பதுபோல் கவிஞன் மேன்மேலும் பாடப்பாட அதில் புது மெருகு ஏறிப் பலமுறை சுட்டெரித்த பொன்னைப்போல் விளங்குதல் இயல்பு. இதை விளங்கிக் கொள்ள வேண்டுமேயானால் கம்ப நாடனுடைய பால காண்டத்தையும் யுத்த காண்டத் தையும் பார்ப்பதே போதுமானது. கம்பனுடைய