பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 இ. அ. ச. ஞானசம்பந்தன்

வளர்ச்சி பால காண்டத்தில் தொடங்கிச் சுந்தர காண்டத்தில் முற்றுப் பெறுகிறது. அதன் பின்னர் உள்ள யுத்த காண்டத்தில் அந்த வளர்ச்சியின் நளினம் வெளிப்படுகிறது. இத்தகைய ஒர் அளவுகோல் ஏற்த்தாழ எல்லாக் கவிஞர்களிடத்திலும் காணக் கூடிய ஒன்றுதான்.

இந்த அளவுகோலைப் புரட்சிக் கவிஞரிடம் பயன் படுத்த முடியாது என்பதை நாம் அறிதல் வேண்டும், அவருடைய கவிதைகள் தொடக்கத்திலும் இடைக் காலத்திலும் இருந்த அளவு பின்னர் கிலைக்கவில்லை என்பதை அவர் மாட்டு அன்பு கொண்டிருந்தும் அவர் கவிதைகளைத் திறன் ஆய்வுக் கண்கொண்டு படிக் கின்றவர்கள் யாரும் அறிந்து கொள்ள முடியும். இத்தகைய ஒரு நிலை ஏற்படுவதற்கு யாது காரணம் என்ற ஆராய்ச்சியில் இப்பொழுது இறங்கத் தேவை யில்லை. இறங்கினாலும் நல்ல விடையைக் காண்பது இயலாத காரியம். தொடக்கத்திலிருந்து இடைக் காலம் வரையில் மிகச் சிறந்த முறையில் வளர்ந்திருக் கிறார் கவிஞர். தொடக்கத்தில், ஒசை நயம் கருதி எழுந்த அவருடைய கவிதை வடசொற்கள் மிகவும் கலந்து அற்றை நாளில் கவிதைகளுக்குரிய மரபோடு விளங்கக் காண்கிறோம். நாளாக நாளாக வட சொற்களைத் தவிர்த்து அழகிய தமிழ்ச் சொற்களாக ஒசை நயத்துடன் பயன்படுத்திய முறையையும் காண முடிகிறது. 1940க்கு மேல் தோன்றிய கவிதைகள் இவ்விரண்டாம் தொகுப்பைச் சேரும். 1950க்குப் பிறகு வந்த கவிதைகள் மறுபடியும் கீழ்நோக்கி இறங்கத் தொடங்கிய நிலையையும் காண முடிகிறது. சிறந்த கவிதைகள் என்று சொல்லத்தக்கவை பலவும்