பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் e 187

ஏறத்தாழ 1935லிருந்து 1950க்குள் தோன்றி விட்டன.

இந்த அடிப்படையை மனத்தில் கொண்டு குடும்ப விளக்கை”க் காண்டல் வேண்டும். கவிச் சக்கரவர்த்தி என்று போற்றப் பெறும் கம்பனுடைய கவிதையில் காண முடியாத ஒன்று குழந்தைச் செல்வத்தை’ப் பற்றிய பாடல்களாகும். தமிழ் இலக்கியத்தில் குழந்தை செல்வத்தைப் பாட வந்த பிள்ளைத் தமிழ் இலக்கியங் கூட மரபுக்கு அதிகம் அடிமையாகிவிட்ட காரணத் தால் ஓரளவு சுவையிழந்து நிற்கக் காண்கிறோம். இதனெதிராகக் கவிஞர் பாடலாம். குடும்ப விளக்’கில் குழந்தைச் செல்வம் பாடப்படுகிறது.

குழந்தைகட்குத் தொண்டு

பிள்ளைகாள் என்றனள்; கிள்ளைகள் வந்தனர். தூய பசும்பொன் துளிகளைப் போன்ற சீயக் காய்த்துகள் செங்கையால் அள்ளிச் சிட்டுக் காட்டியும் சிறுகதை' சொல்லியும் தொட்டுத் தேய்த்துத் துளிருடல் கலங்காது நின்ற திருக்கோலப் பொன்னின் சிலைகட்கு கன்னி ராட்டி கலஞ் செய்த பின்னர்ப். பூவிதழ் மேற்பனி தூவிய துளிபோல் ஓவியக் குழந்தைகள் உடலின்நீர்த் துளிகளைத் துடைத்து, கெஞ்சில் சுரக்கும் அன்பை அடக்கா தவளாய் அழகுமுத் தளித்தே பறப்பீர் பச்சைப் புறாக்களே என, அவர் அறைக்குள் ஆடைபூண் டம்பலத் தாடினார்.