பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் 6 189

செய்யும் பொழுது தன் துயர் காணாத் தகைசால் பூங்கொடியாய்” அவரவர்கள் விருப்பத்தைப் பெரித்ென மதித்துப் பணி புரிவதாகும். அவ்ரவர் கட்கு விருப்பமான கறிகளைச் சமைக்கும் பொழுது சமைக்கப்பட்ட கறி, காய்களில் கேவலம் உணவுப் பொருளைக் காணாமல் அதனை விரும்பி உண்பவர் களின் முகத்தையே அக்கறிகளில் காண்கின்றாள் என்றும், சிறிய குழந்தை சப்புக் கொட்டிக் கொண்டு அக்கறியை உண்ணுகின்ற காட்சியைக் காதில் கேட் கின்றாள் என்றும் பாடுவது தாய் மன்த் தத்துவத்தை நன்கு அறிந்திருந்த கவிஞரின் ஒப்பற்ற கவிதைத் திறத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

என்ன கறி வாங்கலாம் ?

கொண்டவர்க் கெது.பி டிக்கும் குழந்தைகள் எதைவி ரும்பும், தண்டுன்றி கடக்கும் மாமன் மாமிக்குத் தக்க தென்ன, உண்பதில் எவரு டம்புக்(கு) எதுவுத வாதென் றெல்லாம் கண்டனள், கறிகள் தோறும் உண்பவர் தம்மைக் கண்டாள்.

பிள்ளைகள் உள்ளம் எப்படி ?

பொரியலோ பூனைக் கண்போல் பொலிந்திடும்; சுவைம ணக்கும் அருந்துமா சிறிய பிள்ளை ?

எனஎண்ணும் அவளின் நெஞ்சம்