பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் அ 141

துணைவி சொன்ன புதுச் செய்தி

அன்றைக்கு மணம்புரிந்த அழகியோன் வீடு வந்தான்; இன்றைக்கு மணம்பு ரிந்தாள் எனும்படி கெஞ்சில் அன்பு குன்றாத விழியால், அன்பன் குளிர்விழி தன்னைக் கண்டாள்; 'ஒன்றுண்டு சேதி' என்றாள்; 'உரை என்றான் 'அம்மா அப்பா வந்தார்'என் றுரைத்தாள், கேட்டு 'வாழிய' என்று வாழ்த்தி 'நொந்தார்கள்' என்று கேட்டு கோயுற்ற வகைய றிந்து தந்தைதாய் கண்டு 'உங்கள் தள்ளாத பருவந் தன்னில் கைந்திடும் வண்ணம் நீங்கள் கடந்திட லாமா? மேலும்

அன்றன்று புதுமை

அன்றிலடி காமிருவர் பழமும் பாலும், ஆருக்கு வேண்டுமடி என்றன் ஆசைக் குன்றத்திற் படர்ந்த மலர்க் கொடியே மண்ணில் குவிந்திருக்கும் சுவையுள்ள பொருள்கள் எல்லாம் ஒன்றொன்றும் மறுகாளே பழமை கொள்ளும் ஒன்றொன்றும் சிலநாளில் தெவிட்டிப் போகும் அன்றன்று புதுமையடி, தெவிட்ட லுண்டோ?

ஆருயிரே கொடுக்கும் இன்பம் என்றான்.

ur– 10