பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 அ. அ. ச. ஞானசம்பந்தன்

இப் பாடற் பகுதியிலுள்ள மற்றொரு சிறப்பையும் காண்டல் வேண்டும். கணவன் வீடு வந்தவுடன் இன் முகங் காட்டி அவனை உபசரிக்காமல் குடும்பச் செய்தி களைப் பேசுவது முறையன்று என்று மனத்தத்துவர் கூறுகிறார்கள். இதை நன்கு மனத்தில் பதித்துக் கொண்ட கவிஞர், வீட்டினுள் வந்த கணவனை அன்பு குன்றாத விழியால் வரவேற்று, உபசரித்து, உடனே மாமன் மாமியர் வந்த செய்தியைக் கூறுகிறாள் என்று பாடிச் செல்வது இப் பழுத்த கவிஞனின் எல்லையற்ற பேராற்றலுக்கு ஒர் எடுத்துக்காட்டாகும்.

பழந்தமிழ் நூலாகிய பத்துப்பாட்டில் பட்டினப் பாலையில் வணிகர் பற்றிப் பேசுகின்றபோது,

கொள்வதும் மிகைகொளாது கொடுப்பதும் குறைகொடாது

என்று கூறப்படுகிறது. இவ் வழகிய கருத்தை மனத்துள் வாங்கிய கவிஞர் குடும்ப விளக்கின் தலைவி கடை யில் வியாபாரம் செய்வதைச் சொல்லும்பொழுது எடுத்துப் பேசுகிறார்:

இளகிய கெஞ்சத் தாளை இளகாத வெல்லம் கேட்பார் அளவாக இலாபம் ஏற்றி அடக்கத்தை எடுத்து ரைப்பாள் மிளகுக்கு விலையும் கூறி மேன்மையும் கூறிச் சற்றும் புளுகாமல், புகன்ற வண்ணம் புடைத்துத் தூற்றிக் கொடுப்பாள்

இரவு நேரத்தில் மனைப் பணிகள் அனைத்தையும் முடித்து, குழந்தைகளை உறங்கவிட்டுப் பின்னர்க்