பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் 0 143

கணவனுடைய படுக்கையண்டை வந்து நிற்கின்றாள் "குடும்ப விளக்கின் தலைவி. கணவன் உறங்கி விட்டானோ என்று ஐயம் கொண்டு நிற்கின்ற தலைவிக்கு தலைவன் தான் உறங்கவில்லை என்பதை எடுத்துக்காட்டக் கையாள்கின்ற முறையைக் கவிஞர் மிக அழகாக எடுத்துக்காட்டுகிறார்: .

தொண்டையினில் ஒன்று அடைக்கவில்லை

துணைவனவன் சிறுகனைப்புக் கனைக்க லுற்றான்

அண்டையிலே மங்கைபோய் "அத்தான்' என்றாள்

அத்தரீனா தூங்கிடுவான்? உட்கார் என்றான்.

சிறந்த கவிஞனை அறிவதற்குக் கவிஞனுடைய உவமைகளையே அளவுகோல்களாகக் கொள்ளுவர் திறனாய்வாளர். அ றி ந் த ைத க் கொண்டு அறியாததை விளக்கவே உவமை தோன்றிற்று எனினும், ஒரு கவிஞன் கையாள்கின்ற உவமையை வைத்து அவனுடைய மேதையை அறிய முடிகிறது. இரவு மெல்ல மறைகின்றது என்பதைச் சொல்லவந்த கவிஞர், !

ஆயினும் கேள்வியால் அகலும் மடமைபோல்

கல்லிரவு மெதுவாய் கடந்துகொண் டிருந்தது என்றும், . . . . . -

புன்னை இலைபோல் புதையடிச் செருப்புகள் என்றும்,

பழந் தமிழ்ப் பொருளை யள்ளிப் படித்தவர் விழுங்குதல்போல் என்றும், . •