பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 0 அ. ச. ஞானசம்பந்தன்

பேசுகிறார். இவ்விரண்டு பகுதிகளிலும் கவிஞரின் நகைச்சுவை பெரிதும் இடம் பெறக் காண்கிறோம். முதல் பகுதியாகிய ஒருநாள் நிகழ்ச்சியில் மாமன் மாமியர், மகன் வீ ட் டி ற் கு ச் சாமான்களுடன் வந்திறங்கும் சிறப்பைச் சொல்ல விரும்புகிறார் கவிஞர். வண்டியிலிருந்து சாமான்கள் எல்லாம் இறக்கப்பட்ட பிறகு அவற்றின் அளவு கண்டு வியந்த தலைவி வண்டிக்குள் இவையெல்லாம் இருந்தன. வென்றால் நீங்கள் இருவரும் எங்கே இருந்தீர்கள்’ என்று கேட்கின்ற அழகும் அதற்கு மாமி தருகின்ற விடையும் மிக அழகாக நகைச்சுவையோடு வெளிப் படுத்தப்படுகின்றன.

மருமகள் வினா

. இவையெல்லாம் வண்டிக் குள்ளே

இருந்தன என்றால், அந்த அவைக்களம் தனிலே விேர் எங்குத்தான் அமர்ந்தி ருந்தீர்? சுவைப்புளி அடைத்து வைத்த தோண்டியின் உட்புறத்தில் கவர்ந்துண்ணும் பூச்சி கட்கும் கால்வைக்க இடமி ராதே

மாமி விடை

என்றனள், மாமி சொல்வான்: "இவைகளின் உச்சி மீதில்