பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் 0 147

குன்றுமேல் குரங்கு போல என்றனைக் குந்த வைத்தார்; என்தலை நிமிர, வண்டி ಆGDEು பொத்த லிட்டார்; உன்மாமன் கடந்து வந்தார் ஊரெல்லாம் சிரித்த தென்றாள்.

இதே தலைவி ஐந்தாம் பகுதியில் கிழவியாக மாறித் தன்னுடைய இளமைக் காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றைக் கூறுகிறாள்:

முன்னால் நடந்ததை மூதாட்டி இந்நாள் நகைமுத்திடம் இயம்புவாள்

ஒருநாள் மாலை பெருமு தாட்டி நடந்த ஒன்றை நகைமுத் தாளிடம் மிகுமகிழ்ச் சியுடன் விளம்ப லுற்றாள்: செம்பில் எண்ணெயும் சீயக் காயும் ஏந்தி மணாளரை எழுந்திரும் என்றேன் 'உனக்கேன் தொல்லை உன்றன் பணிச்சியை எண்ணெய் தேய்க்க அனுப்புக' என்றார். நானே அப்பணி நடத்துவேன் என்றேன். "மானே, மெல்இடை வஞ்சியே, 曲 போய்க் கிளியுடன் பேசியும் ஒளியாம் மிமற்றியும்