பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 இ. அ. ச. ஞானசம்பந்தன்

களியுடன் இருப்பாய் கவலைஏன்?' என்றார். அறவே மறுத்ததால் அறைக்குச் சென்றேன். பின்னர் ஓர் பணிச்சி என்மனா ளர்க்கே எண்ணெய் இட்டுத் தண்சீ யக்காய் தேய்த்து வெந்நீர் சாய்த்துத் தலைமுடி சிக்கறுத் திருந்தாள். திடும்என அங்கே என்றன் மாமியார் என்னன்பு மகனே, ஏதுன் மனைவி இப்ப ணிச்சியை உனக்கு முழுக்காட்ட ஒப்பிய"தென்றார். அதற்கென் மணாளர் ஆம்அவள் என்னை எண்ணெய்இட் டுக்கொள எழுந்திரும் என்றாள் ஒப்பேன் என்றேன் உடனே உட்சென்று இப்பணிச்சியை அனுப்பினாள் என்றார். அப்படி யாஎன் றன்.புது மாமியார் . இப்புறம் திரும்பி எதிரில் நோக்கி முக்கா டிட்டே முகம்மறைத் தபடி - சிக்கறுத் திருந்த சிறிய பணிச்சியை தங்கத் திடத்தில் சந்தனம் கொடுத்தே இங்கே அனுப்படி என்றார். பணிச்சி அகலும்போது முக்கா டகன்றது. - தங்கமே பணிச்சி என்பதை அங்கென் மாமியார், அன்பர், கண்டனரே.

இப் பகுதியில்தான் மணாளன் ஒரு நாள் எண்ணெய் தேய்த்து விடுவதற்குத் தன் மனைவி வேண்டா