பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் e 149

மென்றும், பணிப் பெண்தான் வேண்டுமென்றும் கேட்டதாகவும் பிறகு வீட்டுத் தலைவியே பணிப் பெண்ணாக வேடமிட்டு அப்பணியை முடித்தாள் என்றும் நகைச்சுவை படப் பேசுகிறார்.

கவிஞருடைய கவிதை நூல்கள் அனைத்தையும் படித்து முடித்த பிறகு அவற்றை நினைவில் நிறுத்தி ஒரு கண்ணோட்டம் விட்டால், சிறந்த கவிதைக்கு ஒர் எடுத்துக்காட்டாய்ப் பல்வேறு உணர்ச்சிகளை வெளியிடுகின்ற சுவைப் பெட்டகமாய் அமைந் திருப்பது கவிஞரின் குடும்ப விளக்கு' என்ற நூலே யாகும் என்பது அறிய முடியும்.

சமுதாயத்திலுள்ள குறைபாடுகள், விருப்பு வெறுப்புக்கள் ஆகியவற்றில் மனத்தை உழலவிட்ட கவிஞர் தம் பாடல்களில் அம் மன உழற்சியை வெளி யிட்டுப் பலவிடங்களிலும் பாடியிருப்பதைக் காண்கின் றோம். இத்தகைய சூழ்நிலைக்கு எதிராக 'அழகின் சிரிப்பு' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள 16 கவிதைத் தொகுப்புகளும் 1944-க்கு முன்னர் வெளியிடப் பெற்றது. ஆதலின் மேலே கூறிய குழப்பங் கள் எதுவுமில்லாமல் ஒப்புயர்வற்ற கவிதைகளாக விளங்கக் காண்கின்றோம். மேலும் அழகு, கடல், தென்றல், காடு, குன்றம், வான், கிளி ஆகிய இயற்கை பொருள்கள்பற்றியே இக் கவிதைகள் புனையப்பட்டு இருத்தலின் மிகச் சிறப்புடையனவாக விளங்கு கின்றன. கலை ந்ோக்கம் பண்டத்த ஒருவன் எல்லாப் பொருள்களிடத்தும் அழகைக் காண்கிறான். நம் போன்றவர்கள் கண்டும் காணாத பொருள்களிலும்,