பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 0 அ. ச. ஞானசம்பந்தன்

அங்கே என்ன அழகு இருக்க முடியும் என்று எள்ளி நகையாடுகின்ற பொருள்களிலும் கவிஞர் அழகைக் காண்கிறார்.

காலை இளம் பரிதியில், கடல் பரப்பில், சோலை யில் எல்லாம் அழகைக் கண்ட அவர். நறுமலரைத் தொடுக்கின்ற மங்கை ஒருத்தியின் விரல் வளைவிலும், கலப்பையுடன் உழவன் செல்லும் புது நடையிலும் அழகுவழியக் காண்கின்றார். அழகைப்பற்றிக் கூற வந்த கவிஞர், "பழமையினால் சாகாத இளையவள் காண்’ என்று பேசிச் செல்கிறார்: "தென்றலைப்' பற்றிப் பேசும்போது, -

திண்குன்றைத் தூள்து ளாகச் செய்யினும்செய் வாய்ஓேர் துண்துளி அனிச்சப் பூவும் நோகாது நுழைந்தும் செல்வாய்

என்று பாடுகிறார். இதனைப் படிக்கும்பொழுது "இமயமும் துளக்கும் பண்பினை' என்ற குறுந் தொகைப் பாடல் நினைவுக்கு வருகிறது.

நம் போன்றவர்களும் இரவில் விண்மீன்கள் நிறைந்த வானத்தைத் தினந்தோறும் காண் கின்றோம். ஒரோவழி திங்களஞ் செல்வன் ஆகாயத் தில் பவனிவருகின்ற காட்சியைக் காண்பதும் உண்டு. ஆனால், கவிஞர் கண்ட இத்தகைய ஒரு காட்சி என்றேனும் நம் மனத்தில் தோன்றியது உண்டா?