பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் e 151

பாற்புகை முகிலைச் சீய்த்துப் பளிச்சென்று "திங்கட் சேவல்" r காற்றிக்கும் குரல்எ டுத்து கல்லொளி பாய்ச்சிப், பெட்டை ஏற்பாட்டுக் கடங்காப் பொட்டுப் பொடிவிண்மீன் குஞ்சு கட்கும் மேற்பார்வை செலுத்திப், "്യജങ്ങ இருட்டையும்' வெளுத்துத் தள்ளும்.

கிளியின் அழகில் ஈடுபட்டுத் தம்மை மறக்கிறார் கவிஞர். அதனைப் பார்க்கும்பொழுது இயற்கை அன்னையின் ஆற்றலும் அவர் நினைவுக்கு வருகிறது. இயற்கை அன்னை ஒவ்வொரு பொருளைப் படைக்குந்தோறும் தன் பால் உள்ள அழகு என்னும் பொருளை அளவாகப் பயன்படுத்திப் படைக் கின்றாளே தவிர்த் தன் பால் உள்ள அழகுப் பொருள் முழுவதையும் எந்தப் பொருளிடத்தும் கொடுத்து விடுவது இல்லையாம்; ஒரு சிறிது அழகையும் ஏனைய பொருள்களையும் கலந்தே படைக்கின்ற இயற்கைப் பெருமாட்டி கிளியைமட்டும் அன்பால், அழகு என்ற பொருள் அனைத்தும் கொட்டிப் படைத்துவிட்டாளாம்!

கொள்ளத் பொருள்க ளோடும், அழகினிற் சிறிது கூட்டிக் கொள்ளவே செயும்இ யற்கை தான்கொண்ட கொள்கை மீறித்