பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் பாரதிதாசனும் e 153

போகும்படியாக அறுத்து விடுவதால் அக்கரை எதிர்பாரா நேரத்தில் திடீரென்று உடைந்து வீழ்கிறது. அந்த அழகிய உவமை இதோ பேசப் பெறுகிறது:

பெருஞ்சிங்கம் அறைய வீழும் யானைபோல் பெருகிப் பாய்ந்து வரும்வெள்ளம், மோத லாலே மணற்கரை இடிந்து விழும்! மருங்கினில் இருந்த ஆலும் மல்லாந்து வீழும் ஆற்றில் பருந்து, மேற் பறக்கும்! நீரில் பட்டாவைச் சுழற்றும் வாளை!

"காதல் நினைவுகள் என்ற சிறு நூலும் மிக அழகிய சுவையுடைய பாடல்களைப் பெற்று விளங்கக் காண்கிறோம். இருள் இன்னும் வரவில்லை என்று வருந்துகிறான் தலைவன். அந்த அழகிய மனநிலையை,

தங்கத்தை ۔ءgia:انق- வான் கடலில் பரிதி தலைமுழ்க மறந்தானோ இருள் என்னும் யானை செங்கதிரைச் சிங்கமென அஞ்சிவர விலையோ

என்றும்,

மேற்றிசையில் அனல்காட்டில் செம்பரிதி வீழ்ந்தும் வெந்து றாகாமல் இருப்பதொரு வியப்பே