பக்கம்:பாரதியும் பாரதிதாசனும்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 ைஅ. ச. ஞானசம்பந்தன்

என்றும் வரும் உவமைகள் கவிஞர் புரட்சிக் கவிஞரே என்பதைப் பறை சாற்றுகின்றன.

ஏறத்தாழ இதே காலத்தில் எழுதப் பெற்ற, * பாண்டியன் பரிசு' என்ற சிறு காப்பியம் மிகச் சிறந்த பெருமையுடையதாகும். நல்ல ஓசை நயமும், விருத்தப்பாவில் துள்ளு நடையும், கலந்து வீறுநடை போடுகின்றது 'பாண்டியன் பரிசு’. புலவர்கள் பாடு கின்ற அணிகளில் தற்குறிப்பேற்றம் என்ற ஒன்றுண்டு. கொடி பறக்கின்ற இயற்கை நிகழ்ச்சியில், பகைவரைப் 'போ போ" என்று கூறுவதாகவும், பொருளை விரும்பிப் பாடுபவர்களை 'வா வா' என்று அழைப்ப; தாகவும் சொல்வது பழங்கவிதை மரபு. ஆனால், புரட்சிக் கவிஞர் 'பாண்டியன் பரிசில்,

கதிர்காட்டின் நெடுங்கோட்டை மதிலின்மீது கைகாட்டி வா பகையே' என அழைக்கும் புதுமைபோல் கொடி பறக்கக் கண்டார் மன்னோ

என்று பேசுகிறார். மேலும்,

கொற்றவர்கள் இருவர்பால் மாறிமாறி நெருங்கிற்று

- வெற்றி மங்கை நூறு முறை ஏமாந்தாள் ஆளைத் தேடி

என்பன போன்ற பகுதிகளில் மிகச் சிறந்த கவிதை நயத்தைக் காண்கிறோம். -